அமலா பாலின் கவர்ச்சியை பார்த்து ஜொள்ளுவிட்ட பிரேம்ஜி!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (14:03 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
 
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் அவ்வப்போது கவர்ச்சியில் களமிறங்கி அதிரவைப்பார். இந்நிலையில் உள்ளாடை தெரியும்படி அண்மையில் போட்டோ நடத்திய அமலா பாலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை பார்த்த நடிகர் பிரேம்ஜி ஜொள்ளுவிடுவது போன்று ஒரு கமெண்ட் செய்து ரசித்துள்ளார். இதனை நெட்சன்ஸ் பலரும் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்