காலமானார் மகாபாரத புகழ் பீமன் ‘பிரவீன் குமார்’!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:59 IST)
மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகரும் தடகள வீரருமான பிரவீன் குமார் இயற்கை எய்தியுள்ளார்.

1947 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் பிறந்த பிரவீன் குமார் சோப்டி தடகள போட்டிகளில் வட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றவர். ஆசிய கோப்பை மற்றும் காமன்வெல்த் ஆகிய தொடர்களில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்.

ஆனால் விளையாட்டை விட அவருக்கு அதிகப் புகழைப் பெற்றுத் தந்தது 1988 ஆம் ஆண்டு முதல் இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மகாபாரத தொடரில் பீமனாக நடித்த கதாபாத்திரம்தான். தமிழில் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் அப்பாவியான பீம்பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் அரசியலிலும் கால்பதித்தார்.

முதலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், இப்போது பாஜகவில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட அவர் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 74.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்