சமீப காலமாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பேச்சுகள் பொதுவெளியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவரை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சிவசேனா ஆளும் மராட்டியத்தின் மும்பை பகுதியை பாகிஸ்தான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சிவசேனாவினர் கங்கனா குறித்து ஆவேசமாக பேசி வந்த நிலையில் அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பை வழங்கியது உள்துறை அமைச்சகம். அதேசமயம் கங்கனாவின் மும்பை அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகின்றனர்.
ஆனால் அரசியல் வட்டாரங்களில் சிவசேனாவின் பெயரை கெடுக்க பாஜக கங்கனா மூலமாக அரசியல் செய்கிறது என சிவசேனாவினர் பேசி வருகின்றனர். கங்கனாவை புரட்சிகரமான பெண் என்று சிலர் வர்ணித்து வரும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவரை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஒருவேளை கங்கனா தன்னை தானே கங்கனா ரனாவத்தாக நினைத்துக் கொண்டால்… தீபிகா படுகோன் பத்மாவதி, ஷாரூக்கான் அசோகர், அஜய் தேவ்கன் பகத்சிங்” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.