மூன்று பேரிடம் அட்வான்ஸ் வாங்கி அவதிப்படும் வெற்றிமாறன்? எந்த படம் முதலில்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (09:29 IST)
இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய எல்லாப் படங்களுமே வெற்றி பெற்றாலும் அசுரனின் சூப்பர் டூப்பர் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அவருக்கு எப்போதோ அட்வான்ஸ் கொடுத்த எல்ரெட் குமார் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தன் படத்தை முடிக்க வேண்டும் என சொல்லியதால் சூரியை வைத்து ஒரு படத்தை ஆரம்பிக்க இருந்தார்.

இதற்கிடையில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் திரைப்படத்தையும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இன்னொரு தயாரிப்பாளருக்காக தனுஷை இயக்கும் படமும் பட்டியலில் உள்ளதாம். இந்நிலையில் இதில் எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் பண்ணும் வெற்றிமாறன், இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்