இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்கள் பிரபலமான நிலையில் இப்போது அது கன்னடத்திலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தி திணிப்புக்காக தமிழகமே ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் இதைப் பலரும் தொடங்கியுள்ளனர்.
இதன் பொருட்டு நடிகர் பிரகாஷ் கன்னடத்தில் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் தாங்கிய டிஷர்ட்டை அணிந்து அதைத் தொடங்கி வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் பிரகாஷ் ராஜ் இப்போது இந்தி திணிப்பையும் எதிர்க்க ஆரம்பித்துள்ளார்.