படத்தில் பிரதீப்புடன் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் வி ஜே சித்து ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரில் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது சம்மந்தமாக ஒரு நேர்காணலில் பேசிய பிரதீப் “நானும் முத்தக் காட்சிகள் வேண்டாம் என்றுதான் சொன்னேன். குடும்ப ரசிகர்கள் வரத்தயங்குவார்கள் என்று. அதற்கு இயக்குனர் அனிமல் மற்றும் லியோ படத்தில் முத்தக் காட்சிகள் இல்லையா? அதைப் பார்க்க ரசிகர்கள் வரவில்லையா? இப்பொதெல்லாம் முத்தக் காட்சிகளை குடும்பத்தோடு வரும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனக் கூறினார். அதனால் நானும் அதை ஏற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.