பிரதீப்தான் தமிழ் சினிமாவின் ப்ரூஸ் லீ… ஐஸ் வைக்கலன்னு சொல்லிட்டு ஐஸ் மலையையே வைத்த மிஷ்கின்!

vinoth

வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (10:56 IST)
ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரைலர் இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தினை நினைவூட்டுவதாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கல்லூரி பேராசிரியராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “ப்ரதீப்தான் தமிழ் சினிமாவின் ப்ரூஸ் லீ. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நான் இப்படி ஒரு இளம் நடிகரைப் பார்க்கவில்லை. அவர் இன்னும் ஆக்‌ஷன் படம் பண்ணவில்லை. ஆனால் விரைவில் பண்ணுவார்.

நான் ப்ரதீப்பை ஐஸ் வைப்பதற்காக இப்படி சொல்லவில்லை. டேய் ப்ரதீப் நீ எனக்கு ஒரு வெங்காயமும் பண்ணவேண்டும். இப்படியே இந்த குணத்தோடு தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகள் இருக்கணும்.  பிரதீப் இயக்குனர்களுக்கு சௌகர்யமான நடிகராக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்