மீண்டும் விஜய் சேதுபதி - பாண்டியராஜ் கூட்டணி: லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா?

Siva

புதன், 15 அக்டோபர் 2025 (18:31 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் கூட்டணியில் 'தலைவன் தலைவி’ நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு படம் இதே கூட்டணியில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகலாம்.
 
லைக்கா நிறுவனம் சமீபத்திய பின்னடைவுகளிலிருந்து மீண்டு, தமிழ் சினிமாவில் முழு வேகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. 
 
பெரிய ஹீரோக்களுக்கு அதிக சம்பளம் கொடுத்துவிட்டு பின்னர் கஷ்டப்படுவதை தவிர்க்க, விஜய் சேதுபதி போன்ற கம்மி பட்ஜெட் நடிகருடன் படம் செய்யவும், ஆனால் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்