ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவுள்ள படம் ஒன்று உருவாக போவதாக கூறப்பட்டாலும், அதற்கு முன்பாக, ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் அருணாச்சலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் லாபத்தை ரஜினிகாந்த், நலிந்த சில திரை நட்சத்திரங்களுக்கு பிரித்து கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் சுந்தர் சி உடன் இணைவதால் இது 'அருணாச்சலம் 2' ஆக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.