பிரபுதேவாவின் அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:05 IST)
பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
நடிகர் இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நடித்த ஒரு சில படங்கள் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் மஞ்சப்பை இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் ’மை டியர் பூதம்’ என்ற டைட்டில் வைத்துள்ளனர்
 
இந்த படத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது குழந்தைகளை கவரும் வகையில் மாயாஜால கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்