புனித் ராஜ்குமாரின் கடைசி திரைப்படத்தின் டைட்டில் டீசர்: கொண்டாடும் ரசிகர்கள்!

திங்கள், 6 டிசம்பர் 2021 (12:14 IST)
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி திரைப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி திரைப்படத்தின் டைட்டில் டீஸர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கந்ததகுடி, என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த டீசரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
புனித் ராஜ்குமாரின் கனவு திரைப்படம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கந்ததகுடி படத்தை பதிவு செய்து வருகின்றனர்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்