பிரபல பாடலாசிரியர் இயக்கத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (16:06 IST)
pa vijay
பிரபல பாடலாசிரியர் ஒருவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சற்றுமுன் சென்னையில் நடந்தது
 
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் பா விஜய். இவர் ஏற்கனவே ஞாபகங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பா விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது .இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் மஹிமா நம்பியார் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்
 
எம்எஸ் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்தில் கலையரசன், அர்ஜய் உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்