பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:27 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் மேல் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. அதன் முதல் படமாக மாநாடு படத்தை முடித்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் 10 தல, நதிகளில் நீராடும் சூரியன் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ்க்கு ஒரு படம் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின.


இந்த படத்தை இப்போது பிரபுதேவா இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. பிரபுதேவா தமிழிலும் பாலிவுட்டிலும் சில படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்