சமீபத்தில் ஜனவரி 2ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதற்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி இலவசம் என மத்தியர் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கல் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாநிலத் தலைநகரங்களில் 3 கட்டங்களாக தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் எனவும், கொரோனா தடுப்பு செலுத்துவதற்காக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.