பீஸ்ட் பட பாடல்… ஆட்டம் போட ரெடியாகும் பூஜா ஹெக்டே!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (12:46 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பீஸ்ட் படத்தின் பாடல் நடனத்துக்கு ஒத்திகை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்