கௌதம் மேனன் பாடியுள்ள ஸ்லம் ஆந்தம்… கோடியில் ஒருவன் படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (12:39 IST)
இயக்குனர் கௌதம் மேனன் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் கோடியில் ஒருவன் திரைப்படம் மே 14-ஆம் தேதி ரம்ஜான் திருவிழா அன்று வெளியாகும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை படக்குழுவினர் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்லம் ஆந்தம் என்ற பாடலை வெளியிட உள்ளனர். இந்த பாடலை இயக்குனர் கௌதம் மேனன், விஜய் ஆண்டனி, பிரேம்ஜி அமரன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பாடியுள்ளனராம். இன்று மாலை 5 மணிக்கு இந்த பாடல் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்