விஜய்யின் ’பிகில் ‘ கெட்டப்பில் காமெடி நடிகர்.... வைரல் புகைப்படம்

ஞாயிறு, 27 ஜூன் 2021 (11:45 IST)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் மயில்சாமி. இவர் பிகில் படத்தில் விஜய்யின் மைக்கேல் ராயப்பன் கெட்டப்பில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடனும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மயில்சாமி.

இவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒன்று மைக்கெல் ராயப்பன். இந்த வேடத்தில் நடிகர் மயில்சாமி உள்ளது போன்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்