பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை முதல் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. மற்ற திரைகளில் இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்துக்கு முதல் நாள் முதலே அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட்களை விற்கவேண்டும் என தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்னம் கண்டீஷன் போட்டுள்ளாராம். இதன் மூலம் குடும்பம் குடும்பமாக ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்க முடியும் என்று அவர் நம்புகிறாராம்.
ஆனால் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இதை யாரும் கடைபிடிக்கவில்லை. அங்கு டிக்கெட் விலை வார இறுதி நாட்களில் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அதிகாரப்பூர்வமாக ஆன்லைனிலேயே விற்கப்படுகிறது. பலரும் இதைப் பகிர்ந்து தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.