தமிழ் ராக்கர்ஸால் சீக்கிரமே ரிலிஸ் ஆன பொன்மகள் வந்தாள்! எப்படி கசிந்தது என அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (15:23 IST)
அமேசான் ப்ரைமில் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாவதாக இருந்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸால் சில மணிநேரங்கள் முன்னதாகவே ரிலிஸ் ஆனது.

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜெஜெ பெடரிக் இயக்கிய ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று முதல் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படம் முதலில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்ததற்கு முன்பாகவே படம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு காரணம் தமிழ் சினிமாவை மிகப்பெரிய அளவில் பாதித்து வரும் பைரஸிதான். தமிழ் ராக்கர்ஸில் அமேசானில் வெளியாவதற்கு முன்பாகவே படம் வெளியானதால் சீக்கிரமே ரிலீஸ் செய்தது ப்ரைம். முன்பெல்லாம் தியேட்டர்களில் படம் வெளியானால் அதன் மூலம் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ பைரஸி வரும். ஆனால் இப்போது எப்படி வெளியானது எனத் தெரியாமல் ப்ரைமும் தமிழ் சினிமாவினரும் குழப்பத்தில் உள்ளனர்.

ப்ரைமில் வெளியாவதற்கு முன்பாகவே, தமிழ் சினிமா பிரபலங்களுக்கு தனியாக போட்டுக் காட்டியுள்ளது ப்ரைம் நிறுவனம். அங்கிருந்து ஏதாவது லீக் ஆகி இருக்குமா என்ற கோணத்திலும் சந்தேகிக்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்