"தூக்குதுரை, காளி" ரெண்டுபேரும் இன்னைக்கே காலி - தமிழ் ராக்கர்ஸின் உள்குத்து..!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (12:25 IST)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த "பேட்ட, விஸ்வாசம்" ஆகிய இரு படங்களும் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் இன்று வெளியானது. 



 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட திரைபடமும் , நடிகர் அஜித் குமார் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படங்கள் காலை 4 மணி முதலே முதல் காட்சிகள் வெளியாகி ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்த இரு படங்களையும்  இணையளதங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது போன்று முன்னர் வெளியான படங்களுக்கும் கோர்ட் தடை விதித்தது ஆனால்  அந்த தடைகளையும்  மீறி அந்த திரைப்படங்கள் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகின. அதேபோல் இந்த திரைபடங்களும் வெளியாகுமோ என அஞ்சப்படுகிறது. 
 
தமிழ் சினிமாவின் எமனாக கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ராக்கர்ஸ் பெரும் குடைச்சல் கொடுத்துவருகிறது . எந்த திரைப்படம் வெளியானாலும் சில மணி நேரங்களிலேயே அந்த திரைப்படத்தை இன்டெர்நெட்டில் வெளியிட்டு வரும்  இந்த தமிழ்ராக்கர்ஸால் பல தயாரிப்பாளர்கள்,  பெரும் நஷ்டத்தை சந்தித்து இந்த சினிமா தொழிலே வேண்டாம்டா சாமி  என்று வேறு பிழைப்பை தேடி சென்றவர்களும் உண்டு. 
 
இப்படி தயாரிப்பாளர்களின் உலையில் மண் அள்ளி போடுவதையே முழு வேலையாக பார்த்துவரும் தமிழ் ராக்கர்ஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 
 
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வாசம் மற்றம் பேட்ட திரைப்படத்தை இணைதளத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது . ஆனால் இதில் அஞ்சப்படும் விஷயம் என்னவென்றால்  இதற்கு முன்னர் வெளியான சில திரைப்படங்களுக்கும் இதே போல கோர்ட் தடை விதித்த நிலையில் அதையும் மீறி தமிழ்ராக்கர்ஸில் அந்த திரைப்படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆதலால்,  தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் இந்த இரண்டு படங்களையும் இன்று வெளியிடுமா என்ற கேள்வி அஜித் , ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது நம்மில் பலருக்கும் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்