காலா படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி பலியானார் மைக்கேல்!!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (12:00 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னையில் துவங்கியுள்ளனர்.


 
 
சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள பிலிம்சிட்டியில் காலா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு ‘தாராவி’ போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 
 
இந்நிலையில், அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பூந்தமல்லியை அடுத்த மேப்பூரைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
 
இதையடுத்து அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
 
மைக்கேலுக்கு சூர்யா என்ற மனைவியும், மைத்ரேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். சூர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
அடுத்த கட்டுரையில்