திருட்டுப்பயலே டீசரை வெளியிடும் அமலா பால்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (11:56 IST)
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘திருட்டுப்பயலே- 2’




ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் - சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.  பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்கும் இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடிக்கின்றார்.

இப்படத்தின் முதல் பார்வை டீசரை அமலாபால் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றார்.
அடுத்த கட்டுரையில்