சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 18 ,000கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த வைரஸை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகின்றனர்.
மின்னல் வேகத்தில் அதிதீவிரமாக பரவி வரும் இந்த வைரஸால் இன்னும் எத்தனை லட்சம் உயிர் போகும் என நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கும் கொடூரமான நோயாக மாறியுள்ளது. தமிழகத்திலும் இந்த நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசின் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது சீனா நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் குறித்து நடிகர் சோ இறப்பதற்கு முன் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையதில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதி அவர் கூறியுள்ளாதாவது, "சீனா அடிக்கடி இந்தியாவின் மீது படையெடுத்து கொண்டே இருக்கும். பார்டர் விஷயத்தில் சீனாவை விட மோசமாக நடந்து கொள்பவர்கள் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். அப்படியிருந்தும், இந்தியா–சீனா நல்லுறவில் இருக்க வேண்டும் என இங்கு பலர் நினைக்கிறார்கள். சீனாவினால் எப்போதும் இடைஞல்கள் வருமே தவிர எந்த ஒரு நன்மையும் கிடையாது. எனவே அமெரிக்காவை உயர்த்தி, சீனாவை அமுக்க வேண்டும் என அவர் பேசிய அந்த வீடியோ இந்த சமயத்தில் சரியாக பொருந்துகிறது.