தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘பெல்லிசூப்புலு ’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் பெல்லிசூப்புலு தமிழ் ரீமேக் உரிமையை பெற்றார்.
இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் கதாநாயகன் வேடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், சரியான ஹீரோவை படக்குழு தேடி வந்தது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது ‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய திரில்லர் படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். செந்தில் வீராசாமி இயக்கப்போகிறார். படத்துக்கு டைட்டில் “பொண்ணொன்று கண்டேன்” என்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.