தொடங்கியது பத்து தல படப்பிடிப்பு… கௌதம் கார்த்திக் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:28 IST)
பத்து தல படத்த்தின் முதல் நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளது. தற்போது கௌதம் கார்த்திக் சம்மந்தமான காட்சிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார். படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் கௌதம் கார்த்திக் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்