சிம்புவுக்கு ரெட் கார்டு நீக்கம்; படப்பிடிப்பு தொடக்கம்! – ரசிகர்கள் மகிழ்ச்சி!

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (09:31 IST)
நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த ரெட் கார்டை திரும்ப பெற்றதால் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் தொடங்கியுள்ள புதிய படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கான முதற்கட்ட போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவின் முந்தைய பட விவகாரம் காரணமாக அவருக்கு ரெட் கார்டு விதித்ததால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிம்பு மீதான ரெட் கார்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனால் இன்று முதல் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்