கமலின் ‘பத்தல பத்தல’… யுடியூபில் கடந்த மைல்ஸ்டோன் வியூஸ்… வெளியான தகவல்!

Webdunia
புதன், 18 மே 2022 (09:42 IST)
கமல் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாகின. அதற்கு முன்பாகவே படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் ரிலீஸாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

தொடர்ந்து ரசிகர்களின் முனுமுனுப்பில் இருக்கும் பாடலாக அமைந்துள்ள பத்தல பத்தல பாடல் யுடியூபில் வெளியாகி ஒரு வாரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ள சோனி ம்யூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்