பசுபதி நடிப்பில் உருவாகும் தண்டட்டி.. கவனம் ஈர்த்த முதல் லுக் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:27 IST)
பசுபதி மற்றும் விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகும் தண்டட்டி படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பசுபதி நடிப்பில் உருவாகும் தண்டட்டி என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை ராம் சங்கையா இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது. கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள நிலையில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர்.

கவனம் ஈர்த்த முதல் லுக்கில் ரோகினி நடுவில் சடலமாக வைக்கப்பட்டு இருக்க, ஒருபுறம் போலிஸ் உடையில் பசுபதியும், மறுபுறம் கையில் அரிவாளோடு விவேக் பிரசன்னாவும் அமர்ந்திருக்கின்றனர். சுற்றிலும் கிராமத்து மனிதர்கள் நிற்பது போல வித்தியாசமாக போஸ்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்