பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர் குறித்து.... இன்னும் திருந்தாத பார்வதி நாயர்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (12:19 IST)
நடிகைகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களுக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொண்டு அவர்களே ஜாதி பாகுபாடுகளுக்கு உதாரணமாக இருக்கின்றனர். இது குறித்து அஜித்தின் என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி மேனன் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் வைப்பதெல்லாம் ஒரு பெருமை என அதற்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
 
சமீபத்தில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதி பெயரை தூக்கிவிட்டு ஜனனி என வைத்துக்கொண்டார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நேரத்தில் மீண்டும் பார்வதி நாயரிடம் ரசிகர்கள் உங்கள் பெயருக்கு பின்னால் ஏன்  நாயர் என்று வைத்துளீர்கள்? அது  ஜாதிப் பெயரா? என கேட்டதற்கு, " இப்போதும் எப்போதும் எனது பெயர் பார்வதி நாயர்" அதை ஒருபோதும் நான் மாற்றிக்கொள்ளமாட்டேன். அதே நேரத்தில் நான் சாதிக்கு முக்கியத்துவமும் கொடுக்கமாட்டேன் என பதில் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்