சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சனி, 5 ஜூன் 2021 (08:40 IST)
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி மேட்ரிமோனியல் தளங்கள் சாதியை வெளிப்படையாக ஊக்குவிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில்  கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் 8 லட்சம் பாலோயர்களைக் கொண்டிருக்கும் அவர் ’தற்போது மேட்ரிமோனியல் தளங்கள் சாதியை வெளிப்படையாக ஊக்குவிக்கின்றன என்று நீங்கள் நினைக்கவில்லையா?’ எனக் கேள்வி எழுப்பி அது சம்மந்தமாக ரசிகர்களுடன் விவாதமும் செய்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்