பார்த்திபன் - கவுதம் கார்த்திக் படத்தின் புதிய அப்டேட்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (22:05 IST)
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன இந்த படத்தை விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய எழில் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது வந்துள்ளது. இந்த படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 22ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார் 
 
இந்த படத்தில் பார்த்திபன் இதுவரை நடிக்காத அளவிற்கு வித்தியாசமான வேடம் என்றும் அதனால் அவர் தனது சம்பளத்தை கூட குறைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியை தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்