15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!

vinoth

திங்கள், 14 ஏப்ரல் 2025 (14:13 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.

இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை. சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்துக்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதை பெருமளவுக் குறைத்துக்கொண்டுள்ளார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் சமந்தா இப்போது விளம்பரப் படங்களில் நடிப்பதற்கும் தயக்கம் காட்டுகிறாராம். இதுபற்றி அவரே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “கடந்த 3 வருடங்களில் 15 விளம்பரப் பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டேன். இந்த படங்களில் நடித்திருந்தால் கோடிக்கணக்கில் பணம் வந்திருக்கும். இப்போது விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பாக மருத்துவர்களிடம் கருத்துக் கேட்டுவிட்டு அதன் பின்னர்தான் நடிக்க முடிவெடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்