''வணங்கான்'' பட டைட்டிலுக்கு பஞ்சாயத்து!

Sinoj
புதன், 28 பிப்ரவரி 2024 (21:08 IST)
வணங்கான் படத்தின் தலைப்புக்கு சர்ச்சை எழுந்துள்ள  நிலையில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். பாலா இயக்கி வருகிறார்.
 
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது இந்த நிலையில், வணங்கான் படத்தின் தலைப்புக்கு சர்ச்சை எழுந்துள்ளது.

கேமராமேன்  சரவணன் வணங்கான் என்ற படத்திற்கான பதிவு செய்து டீசரை சென்சார் செய்துள்ள நிலையில், பாலா இப்போதுதான் வணங்கான் என்ற படத்தை எடுத்து வருகிறார்.
 
எனவே அருண் விஜய்யின் வணங்கான் படம் பாலாவின் வணங்கான் என்ற தலைப்பில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், இப்போது பஞ்சாயத்து இருதரப்பும் இடையே நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த தலைப்பு பிரச்சனைக்கு காரணம் இருவேறு கவுன்சிலில் சரவணன் மற்றும் பாலா தங்கள் படங்களுக்கு ஒரே தலைப்பை பதிவு செய்ததுதான் காரணம் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்