வணங்கான் ஷூட்டிங்கில் இயக்குனர் பாலா என்னை அடித்தார்... பிரபல நடிகை குற்றச்சாட்டு

vinoth

புதன், 28 பிப்ரவரி 2024 (14:12 IST)
அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து பின்னர் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் விலகியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சூர்யா நடிக்கும் போது இந்த படத்தில் பிரேமலு மூலமாக புகழ்பெற்றுள்ள நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். அப்போது ஒரு காட்சியின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஷூட்டிங்கின் போது ஒரு பாடல் காட்சியை எடுத்த போது ட்ரம்ஸ் போன்ற ஒரு இசைக் கருவியை வாசித்துக் கொண்டே பாடுவது போன்ற காட்சியில் மூன்று டேக்குக்குப் பிறகும் மமிதாவால் சரியாக நடிக்க முடியாத போது பாலா அவரை அடித்ததாகக் கூறியுள்ளார். அப்போது சூர்யாவும் இருந்ததாகவும் அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இயக்குனர் பாலா மீது பல விமர்சனங்கள் இருக்கும் நிலையில் இப்போது மமிதாவின் இந்த குற்றச்சாட்டு மேலும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

Director Bala hits MamithaBaiju on the sets of Vanangaan & later on she opted out of the project !!

No wonder why #Suriya dropped the Project & moved on, great decision

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்