பையா 2 படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இவரா? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (08:25 IST)
லிங்குசாமி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது.

பின்னர் கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து பையா 2 கதையை விவரித்ததாகவும், அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கார்த்தி, ஆர்யா இருவருமே அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விஷ்ணுவர்தனின் தம்பி இயக்கத்தில் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்