வருகிறதா படையப்பா 2 ? கே எஸ் ரவிக்குமார் கதை விவாதம்!

திங்கள், 7 மார்ச் 2022 (17:04 IST)
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையில் இமாலய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்த படத்தின் இமாலய வெற்றியால் அடுத்து அதை விட பெரிய படமாக கொடுக்க வேண்டும் என ரஜினி 2 ஆண்டுகள் இடைவெளி எடுத்துதான் பாபா படத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் இப்போது கூட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் படையப்பா நல்ல டி ஆர் பி யை பெற்றுவருகிறது. இந்நிலையில் படையப்பா படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணலில் படையப்பா படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் கதாநாயகனாக நடிக்க வைக்க யார் பொருத்தமான கதாநாயகன் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிவகார்த்திகேயனை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் இப்போது ரஜினிக்காக அவர் தன் குழுவினரோடு படையப்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்சன் படத்துக்குப் பிறகு ரஜினி இந்த கதையில் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்