'கார்த்தியின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம்:'வாய் திறக்காத காட்டன் வீரன்'- புளூசட்டை மாறன் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:27 IST)
பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸின் போது அவர்களின் கட் அவுட்டிற்கு ரசிக்ர்கள் ''பாலாபிஷேகம் செய்வதற்கு  தடைவிதிக்க வேண்டும்’’ என்று சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி.  இவரது 25 ஆவது படம் ஜப்பான். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கிய  நிலையில், இப்படம்   இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.இன்று  முதல் 15 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தீபாவளியையொட்டி  ரிலீஸாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   இந்த நிலையில், காசி தியேட்டரில்  வைக்கப்பட்டிருந்த  கார்த்தியின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய அதன் ஆபத்தை உணராமல்  ரசிகர்கள் பல அடி உயரத்திற்கு ஏறி நின்று அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  ரசிகர்களின் செயலுக்கு பலரும் விமர்சனம் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன், ‘’உருப்படாத ரசிகர்கள். வாய் திறக்காத காட்டன் வீரன்.

இப்படியான முட்டாள்தனமான செயல்களை காசி தியேட்டர் அனுமதிப்பது கேவலம். காவல்துறை இந்த தியேட்டர் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி இப்படியான பாலாபிஷேக குரங்குத்தனங்களை தடை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்