துருவ் விக்ரம்மோடு இணைந்த பா ரஞ்சித்… விக்ரம் ரியாக்‌ஷன்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:46 IST)
துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்க உள்ளாராம்.

பரியேறும் பெருமாள் வெற்றிப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க கலைப்புணி தாணு தயாரிக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரொனா ஊரடங்குக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துருவ் விக்ரம் இப்போது தனது தந்தை விக்ரம்முடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரிசையாக திறமையான இயக்குனர்கள் படத்தில் அவர் நடிக்க இருப்பது அவரின் சினிமா வாழ்க்கையை ஏறுமுகமாக அமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் மாரி செல்வராஜ் தனது முதல்பட தயாரிப்பாளரான இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனே தயாரிக்கட்டும் என சொல்ல, விக்ரம் சிறிது யோசித்துள்ளாராம். விக்ரம்மின் யோசனைக்குக் காரணம் பா ரஞ்சித் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதனால் துருவ் படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்படுமோ என்று அஞ்சினாராம். ஆனால் மாரி செல்வராஜ் உறுதியாக இருந்ததால் பா ரஞ்சித்தே தயாரிக்கட்டும் என விக்ரம் சொல்லிவிட்டாராம்.

Source –வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்