படப்பிடிப்பை தொடங்கிய வலிமை படக்குழு…. எப்போ வருவார் அஜித்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:41 IST)
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பை நேற்று சென்னையில் தொய்டங்கியுள்ளார் ஹெச் வினோத் தொடங்கியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது படக்குழு. இதையடுத்து நேற்று சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளது. ஆனால் அதில் அஜித் மற்றும் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லையாம். பேட்ச் வொர்க் என சொல்லப்படும் சிறு சிறு காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளாராம் வினோத். விரைவில் அஜித் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்க இருக்கிறாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்