விஜய்சேதுபதி ரகசியத்தை வெளியிடும் பா.ரஞ்சித்!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (20:10 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இதுவரை படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனை அடுத்து நாளை மாலை 5 மணிக்கு இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர் குறித்த ரகசியம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள் 
 
விஜய்சேதுபதி ரகசியத்தை வெளியிடும் பா.ரஞ்சித்!
இயக்குனர் பா.ரஞ்சித் அப்படி என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பதை அறிய விஜய் சேதுபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
வெங்கடகிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மேகாஆகாஷ், விவேக், மோகன் ராஜா உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்