பா ரஞ்சித்தின் அடுத்த படத்தைக் கைப்பற்றிய பிரபல விநியோக நிறுவனம்!

vinoth

புதன், 14 பிப்ரவரி 2024 (11:00 IST)
அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் மற்றும் ப்ளுஸ்டார் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படமாக ஜே பேபி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் படத்துக்கு அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு இடத்தில் கூட கட்டோ அல்லது வசனத்தை ம்யூட் செய்யவோ சென்சார் போர்ட் பரிந்துரைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த படம் மார்ச் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ப்ளு ஸ்டார் படத்தையும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்