பா ரஞ்சித் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் ஜி வி பிரகாஷ்!

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:52 IST)
அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் மற்றும் ப்ளுஸ்டார் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இதையடுத்து அவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெ பேபி என்ற திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்போது பா ரஞ்சித் தயாரிப்பில் அடுத்து உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்த படத்தை அகிரன் மோசஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க வுள்ளார். படத்தில் கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்