பா ரஞ்சித் உள்ளிட்ட 4 இயக்குனர்களின் ஆந்தாலஜி ’விக்டிம்’… டிரைலரோடு வெளியான ரிலீஸ் தேதி!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:11 IST)
விக்டிம் என்ற ஆந்தாலஜி தொடரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பா ரஞ்சித், எம் ராஜேஷ், சிம்பு தேவன் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், பா ரஞ்சித் மற்றும் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குறும்படங்களின் தொகுப்பு விக்டிம் ஆந்தாலஜி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜி முதலில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் அந்த வெளியீடு தடைபட்டது.

அதையடுத்து இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. புதிதாக தமிழில் கால் பதிக்க உள்ள சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த ஆந்தாலஜி ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆந்தாலஜியின் டிரைலரும் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்