நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐசிசி கோப்பைகள் எதையுமே பெற்றதில்லை என்ற குறைய சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் தீர்க்கப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியர் இயான் மோர்கன். ஆனால் அதன் பின்னர் அவரின் ஆட்டத்திறன் மிகவும் மோசமானது. அவர் மோசமான பேட்டிங் பார்மில் இப்போது இருந்தாலும் அவரது கேப்டன்சியில் பெறும் வெற்றிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தன.
ஆனால் அவரின் தொடர்ந்து ஃபார்ம் அவுட்டால் அவர் மீது விமர்சனங்கள் அதிகமான நிலையில் அவர் இந்த மாத தொடக்கத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகி, சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இது இங்கிலாந்து அணியின் நடுவரிசையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. அதையடுத்து இப்போது டெஸ்ட் அணியின் கேப்டனாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். இப்படி இரண்டு மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.