இனிமேல் சூரி கொட்டுக்காளி போன்ற படங்களில் நடிக்க மாட்டார்… இயக்குனர் வினோத்ராஜ் ஆதங்கம்!

vinoth
திங்கள், 13 ஜனவரி 2025 (14:14 IST)
கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்க சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்திருந்தார். படம் பின்னணி இசையில்லாமல் ரிலீஸானது

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இதனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதுபற்றி இப்போது பேசியுள்ள இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் “இனிமேல் சூரி கொட்டுக்காளி போன்ற படங்களில் நடிக்க மாட்டார். இந்த படத்துக்கு அவ்வளவு கடினமான உழைப்பைக் கொடுத்தார். ஆனால் அவருக்கு கருடன் படத்தில் கிடைத்த பெயர் இந்த படத்தில் கிடைக்கவில்லை.  எல்லோரும் ‘சூரி ஏன் இந்த படத்தில் நடித்தார்’ என்றுதான் கேட்டார்கள். பின் எப்படி அவர் மீண்டும் இதுபோல ஒரு படத்தில் நடிப்பார்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்