பொங்கல் அன்று சர்ப்ரைஸாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோல் செய்திருந்தனர். இந்த படம் வெளியாகி பெரும் வசூலை குவித்த நிலையில் அப்போதே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில் இன்று பொங்கல் நாளில் ஜெயிலர் 2 குறித்த அறிவிப்பு வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அறிவிப்பு வீடியோவிலேயே மெஷின் கன், ராக்கெட் லாஞ்சர்கள் தெறிக்கின்றன. அதனால் படத்திலும் ஜெயிலரில் காட்டப்பட்டதை விட அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அறிவிப்பு வீடியோ வெளியாகி 1 மணி நேரத்திற்குள்ளேயே 10 லட்சம் பார்வைகளை தாண்டி வீடியோ வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K