தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி எஸ் மித்ரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்தது.
அதையடுத்து அவர் இயக்கிய சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகமான சர்தார் 2 வை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை தெலுங்கில் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சர்தார் 2 ரிலீஸுக்குப் பிறகு இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.