மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

vinoth

செவ்வாய், 20 மே 2025 (10:23 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன.

இதற்கிடையில் அவர் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் முடங்கிய மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது அவருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. இந்நிலையில் விஷால் உடனடியாக ஒரு வெற்றிப்படம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஷால் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து விஷால் தனக்கு ‘இரும்புத் திரை’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் மித்ரனுடன் மீண்டும் கைகோர்க்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்