பிரபல ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் பங்கேற்கும் நடிகை ஓவியா

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (12:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய துணிச்சலான பேச்சும், குணமும் மக்களால் பாராட்டப்பட்டது. இதனால் அவருக்கு கிடைத்த ஆதரவையடுத்து சமூக வலைதளங்களில் சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமானது.


 
 
இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய கடைக்கான விளம்பரத்தில் ஓவியா நடித்துள்ளார்.  மேலும், அந்த கடை திறப்பு விழா வருகிற திங்கள் கிழமை நடக்கவுள்ளது. அந்த விழாவில் ஓவியா  பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
இந்நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்வதால், அவரை நேரில் காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். சரவணா ஸ்டோர்ஸின் முந்தைய விளம்பரங்களில் நடிகை தமன்னா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்