ஓவியாவைக் கழட்டிவிட்ட சுந்தர்.சி

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (12:16 IST)
‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தில், ஓவியா ஹீரோயினாக நடிக்கவில்லை என்கிறார்கள்.


 

 
சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான காமெடிப் படம் ‘கலகலப்பு’. விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடித்த இந்தப் படம், சூப்பர் ஹிட். 5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார் சுந்தர்.சி. முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் யாருமே இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். ஜெய், ஜீவா இருவரும் ஹீரோக்களாக நடிக்க, கேத்ரின் தெரேசா மற்றும் நிக்கி கல்ரானி இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

‘பிக் பாஸ்’ மூலம் புகழ்பெற்ற ஓவியா இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹீரோயின் லிஸ்ட்டில் அவர் இல்லை. வேண்டுமானால் கெஸ்ட் ரோலில் அவர் நடிக்கலாம் என்கிறார்கள். சுந்தர்.சி இயக்குவதாக இருந்த ‘சங்கமித்ரா’ படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்